Saturday, March 28, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிபத்தில் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

விபத்தில் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

அரநாயக்க – மாவனெல்ல வீதியில் அலுபத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் அரநாயக்க பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கான்ஸ்டபிள் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து திக்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக கண்டியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கடமையாற்றும் போதே இந்த கான்ஸ்டபிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த கான்ஸ்டபிள் கந்தளே அக்போபுர பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles