தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
பேரூந்து கட்டணத்தை ஒரு ரூபாவினால் குறைக்குமாறு அல்லது பேருந்து கட்டணத்தை ஏதேனும் ஒரு தொகையில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கட்டணக்குறைப்பினை மேற்கொள்ள முடியாது என தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் டீசலின் விலையை மேலும் 30 ரூபாவினால் குறைத்தால் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.