ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி, ட்ரே மற்றும் பிகான்களுக்கு தடை விதித்து பிரித்தானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் இந்த உத்தரவு அமுலில் உள்ளது.
எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரேஸ் காஃபி தெரிவித்தார்.
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.1 பில்லியன் தட்டுகள் மற்றும் 4 பில்லியன் கரண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.