நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பல வைத்தியசாலைகளின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவிற்கு ஏற்ற வேதனம் அல்லது கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை, பெற்றுக்கொண்டுள்ள வங்கி கடனுக்கு வட்டி வீதத்தை அதிகரித்தமை மற்றும் புதிய ஆட்சேர்ப்பு ஆகியனவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவசர சேவை உள்ளிட்ட வைத்தியசாலையின் பல்வேறு வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
எனினும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில வைத்தியசாலைகளில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.