பொருளாதார நெருக்கடி எதுவாக இருந்தாலும், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 2022 வாக்காளர் பதிவேட்டின்படி மொத்தம் 16,856,629 பேர் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினால் தேர்தலைத் தடுக்காத பட்சத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது தேசிய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .