Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு225 எம்.பிகளில் 17 பேர் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லையாம்

225 எம்.பிகளில் 17 பேர் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பிரதிநிதிகளில் 208 பேர் தமது கல்வித் தகுதியை வெளியிட்டுள்ளனர்.

எனினும், 17 பேர் தமது கல்வித் தகுதியை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கல்வி மற்றும் தொழில் தகுதிகளை தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்ற அடிப்படையில் அதுதொடர்பான தகவல்களை வெளியிடுமாறு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 208 எம்.பிகள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், 17 எம்.பிகள் உரிய தகவல்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, யதாமிணீ குணவர்தன , கெவிது குமாரதுங்க, எஸ் வியாலேந்திரன், பிள்ளையான் , மஹிந்த ராஜபக்ஷ , குமார வெல்கம, பியல் நிஷாந்த ஆகியோர் தமது கல்வி மற்றும் தகைமைகளை வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் அடங்குவர்.

நாடாளுமன்ற இணையத்தளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

#Sunday Times

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles