Sunday, May 17, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை

அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கக்கடவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்டதற்கு இணங்க வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசமுள்ளனவா? அல்லது குறித்த வாகனங்கள் உரிய வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மட்டத்தில் தனித்தனியாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles