Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டண குறைப்பில் எரிபொருள் விலை மட்டும் தாக்கம் செலுத்தாதாம்

பேருந்து கட்டண குறைப்பில் எரிபொருள் விலை மட்டும் தாக்கம் செலுத்தாதாம்

இரண்டு சந்தர்ப்பங்களில் 25 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணியாளர்களுக்கான வேதனத்தை வழங்குதல் மற்றும் சகல தனியார் பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளமையால் தங்களது தொழில்துறை பாதிப்படைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

கொவிட்-19 காரணமாக அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை வருடாந்த கட்டண திருத்தத்தின்போது அமைச்சர் குறைத்திருக்க முடியும்.

எனினும் அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன குறித்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கவில்லை.

கடந்த காலங்களில் எரிபொருள் குறைவாக காணப்பட்ட நிலையில் சேவையில் ஈடுபட்ட சில பேருந்துகள் அதிகளவான வருவாயை ஈட்டியிருந்தன.

இதன்போது பேருந்து பணியாளர்களும் அதிக வேதனத்தை பெற்றதுடன் தற்போது அந்த தொகைக்கே பணியாற்றுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles