Sunday, September 21, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய ரணில் தீர்மானம்?

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய ரணில் தீர்மானம்?

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டை பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கோட்டே பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகையை நிறுவவும், தற்போது கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles