Monday, December 22, 2025
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு நேரம் குறைக்கப்படலாம்

மின்வெட்டு நேரம் குறைக்கப்படலாம்

நிலக்கரி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பர் 22ம் திகதியுடன் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது நிலக்கரி தொகையொன்று கிடைத்துள்ள நிலையில், அதனை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீள இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளை அல்லது நாளை மறுதினம் இந்த மின்னுற்பத்தி அலகினை சோதனைக்காக இயக்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்மையத்தின் 3 உற்பத்தி அலகுகளும் தொழிற்படுமாக இருந்தால், மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், குறித்த அலகின் மின்னுற்பத்தி தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டதன் பின்பே அது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

– The Morning

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles