2022ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2021 இல் சுற்றுலா வருவாயான 506.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 124.2% வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு 719,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், கடந்த வருடம் இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் பெறுமதி 3.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இது 2021 உடன் ஒப்பிடும்போது 35.9% அதிகமாகும்.