வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கணக்காய்வாளர் நாயகத்தின் பங்கு மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் அதிகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தமை, மேற்படி குழுவின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கணக்காய்வளார் நாயகம் மற்றும் ஊழியர்களிடம் கோப் குழு மன்னிப்பு கோரியுள்ளது.
இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்க கோப் குழு தீர்மானித்துள்ளது.
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த 5ஆம் திகதி காலை அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியது.
அந்த நேரத்தில் அமைச்சரின் நடவடிக்கையால் அவர் அதிருப்தி அடைந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி தனது தலைமையில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வின் போது, அமைச்சர் மனுஷ நாணயக்கார கணக்காய்வாளர் நாயகத்தின் வகிபாகம் மற்றும் கோப் குழுவின் அதிகாரங்களை விமர்சித்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் இவ்வாறான அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் நிதிக்கட்டுப்பாட்டு எதிர்பார்ப்புகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தாம் கருதுவதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Lankadeepa