பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் இலங்கை தன்னிறைவு அடைய உதவுவதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பால் உற்பத்திக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவின் தேசிய பால்வள அபிவிருத்திச் சபையும் உள்ளூர் பால் நிறுவனமும் இணைந்து தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக்க தெரியவந்துள்ளது.