Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்களிப்பு: விண்ணப்ப இறுதி திகதி ஜனவரி 23 வரை

தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்ப இறுதி திகதி ஜனவரி 23 வரை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2023 ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், தபால் மற்றும் புகையிரத ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் ஆகியோர் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என ஆணையாளர் தெரிவித்தார்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு www.elections.gov.lk அல்லது 1919ஐ தொடர்பு கொண்டு அணுகலாம்.

தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles