Friday, July 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால செல்லும் வெளிநாட்டவர்களுக்கு டொலரில் டிக்கெட் வாங்கலாம்

யால செல்லும் வெளிநாட்டவர்களுக்கு டொலரில் டிக்கெட் வாங்கலாம்

யால தேசிய பூங்கா உட்பட இலங்கையில் உஅமெரிக்க டொலர்கசெலுத்தி ள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் எதிர்காலத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், இந்த திட்டம் இந்த மாதம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு டொலர்களை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி இம்மாதம் யால தேசிய பூங்காவில் இருந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் அறிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் யால தேசிய பூங்காவிற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பார்வையாளர்களுக்கான வசதிகளை உடனடியாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles