Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு பிள்ளைகளுக்கும் விஷமூட்டிய தாயும் மரணம்

இரு பிள்ளைகளுக்கும் விஷமூட்டிய தாயும் மரணம்

தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.

தாயினால் விஷமூட்டப்பட்ட வந்த ஐந்து வயது சிறுவன், கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இவர்கள்இ கம்பஹா மாவட்டத்தின்இ லோலுவாகொட – தலாஹேன பிரதேசத்தில் வசித்து வந்தவர்களாவர்.

இந்த நிலையில் விஷம் அருந்திய எட்டு வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles