Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தின் வருமானம் குறைகிறது

அரசாங்கத்தின் வருமானம் குறைகிறது

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி வீத அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திடம் கடன் பெறுவதற்கு அறவிடப்படும் பணத்தின் அளவு குறைந்துள்ளது.

இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதனால் தேவையான தொகையை பெற அரசு அதிக அளவில் பத்திரங்களை விற்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

திறைசேரி உண்டியல், பத்திரங்களின் வட்டி விகிதம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு கடன் வாங்கும் தொகை குறைந்த அளவே வருகிறது. உதாரணமாக, 8மூ வட்டி விகிதத்தின் கீழ், அரசாங்கம் ரூ. 100 கருவூல உண்டியலை விற்றால்இ அரசாங்கத்திற்கு வட்டியாக 92 ரூபா கிடைக்கும், அதை வாங்குபவருக்கு 8 ரூபா கிடைக்கும்.

ஆனால் 100 ரூபா கருவூல உண்டியலை 33மூ வட்டி விகிதத்தில் விற்றால் அரசுக்கு 67 ரூபா கிடைக்கும்.அதை வாங்குபவருக்கு 33 ரூபாய் கிடைக்கும். இதனால் அரசுக்கு கிடைக்கும் பணத்தின் அளவு குறைகிறது.

இதன்காரணமாக நாட்டில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles