Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் கறுப்பு பட்டியலில்

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் கறுப்பு பட்டியலில்

சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்ற அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணிமனை (SLBFE) தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவின் மூலம் சட்டவிரோதமாக ஓமான் நாட்டுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வேலை செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்ற பெண்கள் ஓமானின் தொழில் அமைச்சினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் சட்டவிரோதமாக ஓமானில் வசிப்பதாகக் கருதப்படும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும்போது, அதற்கான செலவினங்களை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles