களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் மற்றுமொரு பிரதிநிதியும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு சென்ற பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 10ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கல்வி அமைச்சின் வாயிலை சேதப்படுத்தியமைக்காக அவர்கள் மீது பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்தார்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் சங்கத்தின் பிரதிநிதி டில்ஷான் ஹர்ஷன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நாளை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.