அரச உத்தியோகத்தர்களின் சேவையானது எட்டு மணித்தியாலங்கள் அல்லது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.
புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘இன்றைய பிரச்சனைகளை தீர்க்க ஒரு புதிய முறை உள்ளது. கடந்த ஆண்டை விட அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அதை ஒரு பொறிமுறையாகவே பார்க்கிறோம். அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவை பிரிக்கப்படவில்லை. அவை ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். அந்தப் பகுதிகளுக்கு இடையே போட்டியோஇ இழுபறியோ இருக்க முடியாது.உங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது. நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமல்படுத்த அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும். இப்படித்தான் முன்னோக்கி செல்ல முடியும். எனவே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அரச ஊழியர்களின் பணி நேரம் எட்டு மணி நேரமாகவோ வாரத்தில் ஐந்து நாட்களாகவோ மாற்றம் செய்யப்படவில்லை. கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம். உங்கள் அனைவரின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்றுவோம் என நம்புகிறோம். என்றார்.