Saturday, January 31, 2026
32.2 C
Colombo
செய்திகள்உலகம்பிரேசிலில் புதிய ஜனாதிபதியாக லுலா டி சில்வா பதவியேற்றார்

பிரேசிலில் புதிய ஜனாதிபதியாக லுலா டி சில்வா பதவியேற்றார்

பிரேசில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக லுலா டி சில்வா பதவி ஏற்றுக் கொண்டார்.

76 வயதான அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்சொனாராவை அவர் தோற்கடித்தார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்சொனாரோவின் ஆதரவாளர்களால் வன்முறைகள் ஏற்படுத்தப்படலாம் என்று ஐயத்துக்கு மத்தியில், நாட்டில் கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி பொல்சொனாரோ நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles