Saturday, July 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு

புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு

இந்த மாதம் முதல் மின்சார பாவனைக் கட்டணத்தை பல மடங்குகளால் அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 75 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம், இந்த மாதம் முதல் 100 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.

இதன்படி

1 முதல் 30 வரையான அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 8 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும், நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
31-60 அலகு பாவனைக்கான கட்டணம் 37 ரூபாவாகவும், நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
61-90 அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 16 ரூபாவிலிருந்து 42 ரூபாவாகவும், நிலையான கட்டணம் 360 ரூபாவிலிருந்து 650 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

91-120 அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 50 ரூபாவாகவே தொடர்ந்தும் பேணப்படும் என்றாலும், நிலையான கட்டணம் 960 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
121-180 அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் அதிகரிக்கப்படாத போதும், நிலையான கட்டணம் 960 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
181 அலகுகளுக்கு மேலான பாவனைக்கான கட்டணம் 75 ரூபாவாகவே பேணப்படும் அதேநேரம் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இந்த யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றால், இந்த மாதம் முதல் புதியகட்டணம் அமுலாக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles