உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார்.
டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 4 2021 அன்று, மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 340 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
2022ல் டெஸ்லாவின் பங்கு மதிப்பு சுமார் 65 சதவீதம் குறைந்தமை மற்றும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை ஆகியவையே அவரது செல்வம் குறைவதற்கு முக்கியக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
#Lankadeepa