Saturday, December 13, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுATMகளில் 10 மில்லியன் ரூபாவை திருடியோரை தேடி விசாரணை

ATMகளில் 10 மில்லியன் ரூபாவை திருடியோரை தேடி விசாரணை

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து 10.65 மில்லியன் ரூபா திருடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று நேற்று அதிகாலை ATM இயந்திரத்தின் கணினியை ஹேக் செய்து மென்பொருளில் உள்ள தரவுகளை மாற்றி பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று நகரங்களிலும் திருட்டு நடந்த விதத்தினை பார்க்கும் ஒரே குழுதான் திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles