வெளிவிவகார அமைச்சு தூதரக கட்டணத்தை திருத்தியுள்ளது.
அதன்படி, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பிராந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள்/பதவிகளின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இந்த திருத்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் சான்றிதழ்கள்ஃஆவணங்களை சான்றளிப்பதற்கான புதிய கட்டண அமைப்பு பின்வருமாறு.
1 பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்கள் – 800.00
2.ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணமும் – 3000.00
3.எந்த ஏற்றுமதி ஆவணம் – 8000.00
4.வேறு எந்த ஆவணம் – 1200.00