Friday, November 15, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊவா ஆளுநர் அலுவலகத்தின் கட்டணங்கள் மாகாண சபையினால் செலுத்தப்பட்டுள்ளதாம்

ஊவா ஆளுநர் அலுவலகத்தின் கட்டணங்கள் மாகாண சபையினால் செலுத்தப்பட்டுள்ளதாம்

ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பயன்படுத்திய வீட்டில் இயங்கும் ஆளுநர் அலுவலகத்தின் மாதாந்த மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களின் பெறுமதி 314 761 ரூபாவாகும்.

ஆளுநரால் செலுத்தப்பட வேண்டடிய இந்த தொகை மாகாண சபை நிதியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை ஆளுநர் அலுவலக ஊழியர்களிடம் ஒப்படைப்பதில் குறைந்தபட்சம் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை எனவும், அந்தஇல்லத்தின் இருப்புப் பொருட்கள் பட்டியலிடப்பட்டு முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பொருட்கள் இழப்பு அல்லது சேதம் தொடர்பில் மாகாண சபையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை இந்த வீட்டின் மின்சாரக் கட்டணமாக 1875 000 ரூபாவும், நீர்க் கட்டணமாக 127 258 ரூபாவும் இக்காலப்பகுதியில் செலுத்தப்பட்டுள்ளன.

மாகாண சபை நிதியில் இருந்து இந்த பில்களை செலுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என்றும், எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தில் இருந்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles