சீனாவில் புதிதாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்ற செய்தியை தொடர்ச்சியாக தெரிவிக்க வேண்டியுள்ளது எனவும், நாடாளாவிய ரீதியில் சில விடயங்களை பின்பற்றவேண்டுமாயினும் அவை கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிப்புகள் மற்றும் பலாபலன்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே புதிய நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
புதிய நடைமுறைகளை பின்பற்றுவதா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.