Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி வழங்கும் முறை அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படும்.

அதற்கமைய, சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும், ஒரு வருடத்தின் பின்னர் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பம் அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles