Friday, November 15, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடு விற்பனை மூலம் 5 இலட்சம் டொலர்களுக்கு மேல் வருமானம்

வீடு விற்பனை மூலம் 5 இலட்சம் டொலர்களுக்கு மேல் வருமானம்

மத்தியதர வர்க்க வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் டொலர்களில் வீடுகளை விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 5 இலட்சம் டொலர்கள் எனவும் இவ்வருட இறுதிக்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கும் நடுத்தர வர்க்க வீடுகளை விற்பனை செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.

11 வீடுகள் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டுபாய், அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஓமன், கட்டார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

மேலும் 8 வீடுகளை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதன் மூலம் அடுத்த வருடம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles