Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி முதலாம் திகதி முதல், வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும்.

எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும்.

திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடாகப் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு நடைமுறைகளை எந்தவித அசௌகரியமும் இன்றி நிறைவு செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles