Friday, November 15, 2024
24 C
Colombo
அரசியல்இந்திய விஜயத்துக்கு நண்பரே நிதி வழங்கினார் - அமைச்சர் கெஹெலிய

இந்திய விஜயத்துக்கு நண்பரே நிதி வழங்கினார் – அமைச்சர் கெஹெலிய

தனது சமீபத்திய இந்திய விஜயத்துக்கு, இந்திய மருந்து நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.

தனது கடன் அட்டை வரம்பை மீறி இருந்ததால், அவரது நண்பர் அதற்கான நிதியை வழங்கியதாகவும், தான் அதனை திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவில் தரையிறங்கியதன் பின்னர் தனது நண்பருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்ததாகக் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நான் 86 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். இது என்னுடைய 17 ஆவது கடவுச்சீட்டு. நான் எட்டு வயதில் என் பெற்றோருடன் இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறேன்.எனது விரிவான பயண அட்டவணை காரணமாக, சில பயண நிறுவனங்களுடன் நான் நெருங்கிய உறவைப் பேணுகிறேன். இந்த உறவுகளின் காரணமாக, இரண்டு அல்லது மூன்று பயண நிறுவனங்கள் எனக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. நான் ஒரு அமைச்சராக இருப்பதால், இந்தப் பயணத்திற்கு அரசின் நிதியைப் பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும், சிக்கனமாக இருக்குமாறு அரசு அறிவுறுத்துவதால், நானே டிக்கெட்டை வாங்கினேன்.

எனது கடன் அட்டைகளை பயன்படுத்தி ஒன்லைன் ட்ராவல் ஏஜென்சிகளிடம் இருந்து விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய எனது செயலாளர் முயற்சித்தார். ஆனால் வாரந்தோறும் செலவின வரம்பு 140,000 ரூபாவாக விதிக்கப்பட்டுள்ளதால் கடனட்டைகள் நிராகரிக்கப்பட்டன. எனவே, எனது சார்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும்படி நண்பரிடம் கோரினேன். நான் இந்தியாவில் தரையிறங்கியவுடன் நண்பருக்கு பணத்தை செலுத்தி விட்டேன்’ என்றார்.

#The Morning

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles