டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.