எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அரச மருத்துவமனைகளின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடி நிலை நீடித்தால், அநேகமாக அடுத்த வாரத்திற்குள் மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, கடமைக்கு சமூகமளிப்பவர்களின் அன்றாட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை மருந்துப் பற்றாக்குறை மற்றும் சில மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடாகும்.
நெருக்கடி தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் பல மருத்துவமனைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.