பல்வேறு திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட கடன் தொகையை உரிய முறையில் பயன்படுத்தாததால் கடன் வழங்கிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3300 கோடி ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் 2014-16 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பத்திரக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையில் 93,175,883 அமெரிக்க டொலர்களும், 70,213,886 யூரோக்களும், 1,328,347 யுவானும் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த பணம் கடன் தவணைகளுக்கு மேலதிக கட்டணமாக செலுத்தப்படுகிறதுடன், பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடன் வழங்கப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய முடியவில்லை என அறிக்கை கூறுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பெலியத்தவிலிருந்து வாட்டிய வரை நீடிக்கும் திட்டம், நகர சுகாதார பாதுகாப்பு மற்றும் துப்புரவு முன்முயற்சி திட்டம், அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி திட்டம், ஆனமடுவ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் என்பவற்றை நிறைவு செய்யாத காரணத்தினாலேயே இந்த தொகை செலுத்த வேண்டியுள்ளது.
#Lankadeepa