Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய கடற்படை தளபதி - விமானப்படை தளபதி சந்திப்பு

புதிய கடற்படை தளபதி – விமானப்படை தளபதி சந்திப்பு

புதிய இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை நேற்று (28) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

புதிய கடற்படை தளபதி இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இலங்கை விமானப்படை தளபதியுடனான உத்தியோக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது தனது வாழ்த்துக்களை விமானப்பப்படை தளபதி அவரிடம் தெரிவித்தார்.

மேலும் ஒன்றிணைந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் கூட்டுப்பயிற்சிகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles