நாடாளுமன்றத்தில் உணவுக்கான வருடாந்த செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த செலவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையின்படி, நாடாளுமன்றில் உணவுக்காக வருடாந்தம் 8 கோடியே 78 இலட்சத்து 28 ஆயிரத்து 82 ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் 80 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்ற வளாகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்திற்காக 7 கோடியே 46 இலட்சத்து 26 ஆயிரத்து 323 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் செலவினங்களை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் அதன் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.