இம்மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்காகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலைமை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், 2023 ஜனவரியில் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இது வேலை செய்யும் இடங்கள் மற்றும் பொது இடங்களுக்கும் பொருந்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.