Thursday, May 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டர் மரணம்: விசாரணை குழுக்களுக்கு பொலிஸ்மா அதிபர் அழைப்பு

தினேஷ் ஷாப்டர் மரணம்: விசாரணை குழுக்களுக்கு பொலிஸ்மா அதிபர் அழைப்பு

பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சகல குழுக்களுக்கும் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவினால் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பான முன்னேற்றத்தை ஆராய்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட 8 குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதனிடையே, தடயவியல் புலனாய்வு குழு, கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் ஆகிய பிரிவுகள் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுக்களின் விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles