ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக G7 பிரதிநிதிகள் முன்வைத்த யோசனைக்கு உடன்பட்ட நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது.
G7 பிரதிநிதிகள், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டுடன், ரஷ்ய எண்ணெயின் ஒரு பீப்பாய் விலையை $60 ஆகக் கட்டுப்படுத்தும் முடிவு டிசம்பர் 5 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்ட நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.