South Asia Gateway Terminals பிரைவேட் லிமிடெட் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து திரிபோஷா வழங்குவதை உறுதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், நிறுவனம் ஒரு வருட காலத்திற்கு திரிபோஷாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும்.
பொருட்கள் நன்கொடை வடிவில் வழங்கப்படவுள்ளதுடன், ரூ.185 மில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவிலேயே எடை குறைந்த குழந்தைகளுக்கு உடனடி தீர்வாக திரிபோஷ வழங்கும் ஒரே நாடு இலங்கை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் இலவச சுகாதார முறைமை உயர் தரத்தில் இருப்பதாகவும், பல வருடங்களாக சவால்களை எதிர்கொண்ட போதிலும் திரிபோஷா நிகழ்ச்சித் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.