Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே மூளைச்சாவு அடைந்த தினேஷ்

வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே மூளைச்சாவு அடைந்த தினேஷ்

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே மூளைச்சாவு அடைந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காருக்குள் வைத்து, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகுஇ அன்றிரவே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாஃப்டர் கழுத்து இறுக்கப்பட்டமையால் இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles