Saturday, October 25, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்போரை உடனடியாக நிறுத்துங்கள்- புட்டினிடம் கோரிக்கை விடுத்த அர்னால்ட்

போரை உடனடியாக நிறுத்துங்கள்- புட்டினிடம் கோரிக்கை விடுத்த அர்னால்ட்

பிரபல ஹொலிவூட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்ய மக்களுக்கு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விடயங்கள் இன்னும் பல உள்ளன.

ரஷ்ய மக்களின் பலம் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்து உள்ளது. அதனால்தான் யுக்ரைனில் நடந்த போரைப் பற்றிய உண்மையைச் சொல்ல நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரஷ்யா தான் இந்த இந்தப் போரைத் ஆரம்பித்தது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல.

ரஷ்ய துருப்பினருக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், ” இது சட்டவிரோதமான போர். இது உங்கள் முன்னோர்கள் ரஷ்யாவைக் காப்பதற்காக நடத்திய போர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் போரைத் நீங்கள் தான் ஆரம்பித்தீர்கள். இந்தப் போரை முன்னெடுத்து செல்வதும் நீங்கள் தான். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும் ” என அவர் புட்டினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles