3 வருடங்களின் பின்னர் 2023 ஜனவரி 8 ஆம் திகதி சர்வதேச பயணத்திற்காக சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொவிட் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது குறைவடைந்துள்ளதால், தனிமைப்படுத்தலும் கைவிடப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சீனாவுக்கு செல்லும் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொவிட் அறிக்கையில் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் நாட்டுக்குள் வர முடியும் என்றும் சீன அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.