Saturday, May 24, 2025
28.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் உள்ள விவசாயிகளுக்கு 42 டொலர் மானியம்

குறைந்த வருமானம் உள்ள விவசாயிகளுக்கு 42 டொலர் மானியம்

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபா (42$) உதவித்தொகை வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவாக பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles