Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்கு சீட்டின் அளவை பொறுத்தே தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் தீர்மானிக்கப்படும்

வாக்கு சீட்டின் அளவை பொறுத்தே தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் தீர்மானிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு அச்சிடப்படும் எனவும், ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்குச் சீட்டின் அளவு குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச் சீட்டுகளை அச்சிட எடுக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கான செலவுகள் திருத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்துடன் ஒப்பிடும் போது வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தால் செலவுகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் அரசாங்க அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் கிடைக்கப்பெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அது வெளியிடப்படும் திகதி மேலும் ஒரு வாரம் தாமதமாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles