ஒரே எண் தகடை கொண்ட கார்களை பண்டாரவளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
HU – 0973 என்ற எண்ணை கொண்ட டொயொட்டா கார் ஒன்று பண்டாரவளையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்துள்ளது.
குறித்த காரை உபயோகிக்காமலும், அனுமதிப் பத்திரம் பெறாமலும் ஒரு தசாப்த காலமாக வைத்திருந்த அவர், இவ்வருடம் அதற்கு அனுமதிப்பத்திரம் பெற சென்ற போது, அதே எண்ணுக்கு மற்றுமொரு மகிழுந்து பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில், மற்றைய மகிழுந்தும் குருணாகல் – எஹெட்டுவ பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி, அந்த எண்ணுக்கான சொந்தக்காரரை கண்டுபிடிக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.