Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி போதாதாம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி போதாதாம்

அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் மாதாந்தம் 145 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெறுகின்ற போதிலும், சம்பளம் வழங்குவதற்காக 93 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் வழங்குவதற்காக 27 பில்லியன் ரூபாவும் சமுர்த்தி மானியங்களை வழங்க 6 பில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக நலப் பணிகளுக்காகவும் அதிகளவு பணம் செலவிடப்படுவதாகவும், இந்தப் பணத்தை சேகரிக்கும் போது சுமார் 154 பில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles