Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் சோதனை: மாணவர் உட்பட 47 பேர் கைது

போதைப்பொருள் சோதனை: மாணவர் உட்பட 47 பேர் கைது

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்று காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது 1.260 கிலோகிராம் ‘மாவா’, 9.630 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் குறித்த மாணவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles