நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 120, 000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் கிரமமாக குறைவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்து 3, 500 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டன.
இந்த எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் டொலர் கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, எரிவாயு தரையிறக்கப்பட்டுள்ளது.