சந்தையில் முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பண்டிகைக் காலத்தில் கேக்கின் தேவையை பேக்கரிகளால் பூர்த்தி செய்ய முடியவில்லை என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார்.
பண்டிகைக் காலங்களில் பிரதான பேக்கரி உற்பத்தியான கேக் உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தவறான கணிப்பே முட்டையின் விலை அதிகரிப்புக்கு காரணம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.